கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட வ்ராய் கெலீ பல்தசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேயரை தெரிவுசெய்யும் செயற்பாட்டை முன்னெடுக்க, மேல் மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் எஸ்.கே. ஜயசுந்தர தலைமையில் இரகசிய வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. அனைத்து உறுப்பினர்களின் சம்மதத்துடன் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வ்ராய் கெலீ பல்தசார் 61 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
மற்றபக்கம், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் போட்டியிட்ட ரீஸா சரூக் அவர்களுக்கு 54 வாக்குகளும் கிடைத்தன.
மேயர் தெரிவுக்குப் பின், கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராக ஹேமந்த குமார தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாக்கெடுப்பின் மூலமாக, கொழும்பு மாநகர சபையில் புதிய நிர்வாக குழுவின் கட்டமைப்பு உருவாகியுள்ளது.