ஈரான்–இஸ்ரேல் மோதல் குறித்து விவாதிக்க பாராளுமன்றத்தில் விசேட நேரத்தை ஒதுக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோது, சபாநாயகர் அந்த கோரிக்கையை மறுத்ததைக் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இன்று (17) பாராளுமன்ற அமர்வினை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிகழ்வைப் பற்றி எதிர்க்கட்சியின் பிரதம கொறடா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்:
“உலகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஈரான்–இஸ்ரேல் மோதல் தொடர்பில் சபையில் உரைக்க வேண்டியது அவசியம். ஆனால், அதற்கான நேரம் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்துத்தான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.”
இந்த வெளிநடப்பில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB), தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) மற்றும் சில சுயாதீன உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.