நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி செய்திகளால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என எரிசக்தி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக, பெற்றோல் விநியோகத்தில் தடைகள் ஏற்படும் என்ற பேச்சுகள் சில சமூக வலைதளங்களில் பரவி வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது உண்மைக்கு புறம்பானதாகும் எனவும், மக்கள் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம், அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான அளவில் எண்ணெய் இருப்பு உள்ளது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் கப்பல்களிடமிருந்து விநியோகம் வழக்கம்போல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களில் உண்மைத் தன்மை இல்லையெனவும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையே மக்கள் நம்ப வேண்டும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.