ஈரான் – இஸ்ரேல் மோதலின் தாக்கம் தொடர்பான விவாதம் நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 9.30க்கு ஒத்திவைப்புஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதலால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்த விவாதம் இன்று (18) பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து இவ்விவாதம் இடம்பெற்ற நிலையில், இன்று நடைபெற இருந்த அனைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளும் நாளை (19) காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி அறிவித்தார்.