Top News
| இலங்கையில் ஒரே நாளில் 13000 ரூபாவால் சரிந்த தங்கத்தின் விலை | | வேறொரு தொலைபேசி இலக்கத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான QR குறியீட்டை பெறும் முறை | | போலி இணையத்தளங்கள் மூலம் QR குறியீடு மோசடி |
Mar 20, 2026

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

Posted on June 19, 2025 by Admin | 354 Views

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற, பட்டியல் ஊடாக தெரிவான கெளரவ உறுப்பினர்களுக்குமான சத்தியப்பிரமாண நிகழ்வு எதிர்வரும் 21.06.2025 சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெற உள்ளது.

இவ் விழா அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள லொயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக நடைபெறும் ஏற்பாடாகியுள்ளது.

இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள், உச்சபீட உறுப்பினர்கள் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிகழ்வு, புதிய உள்ளூராட்சி மக்களாட்சியின் ஆரம்பமாக கருதப்படுவதால், மாவட்டத்தின் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.