Top News
| வான வேடிக்கையான துடுப்பாட்டத்தினால் வீரமுனை மின்னொளி மென்பந்து சுற்றுப்போட்டியை கைப்பற்றிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி | | முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும் | | எரிபொருள் வவுச்சரில் மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் சாரதி விளக்கமறியலில் |
Aug 18, 2025

நோயாளர்களுக்கு வழங்கப்பட்ட மருந்தில் கழிவு நீரும் உப்பு நீரும்

Posted on June 19, 2025 by Admin | 165 Views

மருத்துவத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரிய ‘இம்யூனோகுளோபுலின்’ தடுப்பு மருந்தில் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியா கொண்ட கழிவுநீர் காணப்பட்டதாகவும், ‘ரிட்டுசிமெப்’ (Rituximab) என்ற புற்றுநோய் தடுப்பு மருந்தில் மருந்து இல்லை, வெறும் உப்பு நீர் மட்டுமே இருந்ததாகவும், உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஜெர்மனிய ஆய்வகமொன்று உறுதிப்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற மருந்துகள் விநியோகம் தொடர்பான வழக்கு இன்று (19) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில், சட்டமா அதிபர் அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னிலை வகித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம, இந்த அதிர்ச்சி தகவல்களை நீதிமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.