Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

அருகம்பேவில் சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ள இஸ்ரேலிய நிறுவனத்தை உடனடியாக அகற்றவும்

Posted on June 20, 2025 by Admin | 350 Views

(அபூ உமர்)

அமைதியாகவும், உல்லாசப்பயணிகளுக்கிடையே பிரபலமான இடமாகவும் விளங்கும் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் – அருகம்பே பகுதியானது தற்போது அதிகரித்த பாதுகாப்பு சூழலால் மக்கள் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த, சர்வதேச கட்டுப்பாடுகளுக்கு முரணான நிறுவனமொன்று குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருப்பதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், பிரதேச மக்கள், மீனவர்கள், விவசாயிகள், மற்றும் அப்பகுதியில் சுற்றுலா வருகை தரும் வெளிநாட்டு பயணிகள் அனைவரிடமும் அச்ச உணர்வு உருவாகியுள்ளது.

இந்த நிலையைக் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் (17.06.2025) பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

“இஸ்ரேல் நிறுவனத்தை பதிவு செய்யப்பட்ட பிரதேசத்திற்கு மாற்றி அனுப்பி, அருகம்பே பகுதியில் நிலவிய அமைதியை மீட்டெடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்கு எப்போதும் நாங்கள் ஒத்துழைக்கிறோம். ஆனால், பொதுமக்கள் நிம்மதியாக வாழும் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.