Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

2025ஆம் ஆண்டு முதல் 6 மாதங்களில் வீதி விபத்தில் 2,000 உயிரிழப்பு

Posted on June 20, 2025 by Hafees | 144 Views

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் சுமார் 2,000 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரையில் வீதி விபத்துக்களினால் 1,133 பேர் உயிரிழந்தனர்.
7,152 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முறையற்ற விதத்தில் வாகனம் செலுத்துதல், உள்ளிட்ட செயற்பாடுகளினால் வீதிவிபத்துகள் ஏற்படுகின்றன.