Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

ஜூலை 1 முதல் அனுமதியற்ற வாகன உதிரி பகுதிகள் அகற்றும் விசேட நடவடிக்கை

Posted on June 21, 2025 by Hafees | 206 Views

அனுமதியின்றி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் விசேட நடவடிக்கை ஜூலை மாதம் 1ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் என வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கான உப பொலிஸ் பரிசோதகர் (DIG) இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் அறிவித்தலின்படி, இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த விசேட நடவடிக்கையின் போது, வாகனங்களில் அனுமதியின்றி பொருத்தப்பட்டுள்ள அதீத ஒளி விளக்குகள், அதீத ஒலிகளை வெளியிடும் ஸ்பீக்கர்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் போன்ற உதிரிபாகங்கள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேவையற்ற உதிரிபாகங்கள், விபத்துகள் நேரும்போது வீதி பயணிகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.