Top News
| நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக ACMCயின் ஏ. அஸ்பர் தெரிவு- மாயாஜாலம் நிகழ்த்தும் பிரதேச சபை உறுப்பினர்கள் | | அட்டாளைச்சேனை பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வசம்! | | கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு தாங்கள் உடன்படுகிறோம்- ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை உறுப்பினர்கள் |
Jul 2, 2025

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

Posted on June 24, 2025 by Admin | 153 Views

(அபூ உமர்)

கெளவரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான கௌரவ  SMM. முஷர்ரப் அவர்களும் அவர்களுடைய  பொத்துவில் பிரதேச சபை ஏழு (07) உறுப்பினர்கள் ,முக்கியஸ்தர்களும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைத்து கொள்ளும் நிகழ்வு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சியின் தேசியத் தலைவர் அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் ( MP) அவர்களின் முன்னிலையில் நாளை 25.06.2025 (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் மாளிகைக்காடு பிரதான வீதியில் அமைத்துள்ள வாவா திருமண மண்டபத்தில் இடம்பெறும்.(சாய்த்தமருது வைத்தியசாலைக்கு அருகாமையில்) .

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள், அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், பட்டியல் வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த இணைவு, அரசியல் சூழ்நிலையிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயல்பாடுகளிலும் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.