Top News
| நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக ACMCயின் ஏ. அஸ்பர் தெரிவு- மாயாஜாலம் நிகழ்த்தும் பிரதேச சபை உறுப்பினர்கள் | | அட்டாளைச்சேனை பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வசம்! | | கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு தாங்கள் உடன்படுகிறோம்- ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை உறுப்பினர்கள் |
Jul 2, 2025

2025ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் ட்ரம்பின் பெயர் பரிந்துரை

Posted on June 24, 2025 by Admin | 136 Views

ஆண்டு தோறும் உலக அமைதிக்கு சிறப்பாக பங்களித்த நபர்களுக்கு வழங்கப்படும் நோபல் அமைதி பரிசுக்காக, 2025ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அவரது பரிந்துரைக்கான முக்கிய காரணங்களில், பாகிஸ்தான்-இந்தியா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அவர் வகித்த மறைமுகப் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்த பரிந்துரையை பாகிஸ்தான் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

இதற்குப் பிறகாக, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றநிலை குறைந்ததற்கான சமாதான முயற்சிகளை சுட்டிக்காட்டிய பட்டு கார்ட்டர் என்பவரும், டிரம்பின் பெயரை பரிந்துரைத்துள்ளார்.

2025 ஆண்டுக்கான நோபல் பரிசுகளுக்கான வெற்றியாளர்கள் இவ்வருடம் அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட உள்ளனர்.