2025 கல்வி பொதுத் தராதர பத்திர (உயர்தர) பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைக்கான விண்ணப்பப் பதிவுகள் ஜூன் 26ஆம் திகதி தொடங்கி ஜூலை 21ஆம் திகதி வரை இணையத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும். பரீட்சைக்கு தோற்ற விரும்பும் மாணவர்கள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள், கீழ்க்கண்ட உத்தியோகபூர்வ இணையதளங்களை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்:
🔗 www.doenets.lk
🔗 www.onlineexams.gov.lk/eic
இவ்விண்ணப்பங்களுக்கு இறுதி நாள் நீடிப்பு வழங்கப்படமாட்டாது என்றும், அனைவரும் குறிப்பிடப்பட்ட கால எல்லைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு, பரீட்சைகள் திணைக்களத்தின் தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்:
📞 011-2784208 / 011-2784537 / 011-2785922