(அபூ உமர்)
இறக்காமம் பிரதேச சபையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுயேட்சை குழுவுக்கு இடையே ஏற்பட்ட உயர்மட்ட அரசியல் உடன்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறப்படும் புதிய துணைத் தவிசாளர் என்.எம். ஆஷிக் மீது உடனடி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சித் தலைவர், செயலாளரிடம் பரிந்துரை விடுத்துள்ளார்.
என்.எம். ஆஷிக், சமீபத்திய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு, பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர்.
இந்நிலையில், அவர் கட்சியின் தீர்மானத்திற்கு முரணான வகையில் செயல்பட்டதனால் கட்சியின் ஒற்றுமைக்கும், அரசியல் ஒழுக்கத்திற்கும் முரணாக இருப்பதாகக் கருதி, கட்சித் தலைவர் உடனடி நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளார்.
சம்பவம், பிரதேச அரசியலில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.