இலங்கை போக்குவரத்து சபை (SLTB) உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்து பஸ்களின் சாரதிகளும் ஜூலை 1, 2025 முதல் ஆசனப்பட்டி (Seat Belt) அணிவது கட்டாயமாக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து சபை தலைவர் பி.ஏ. சந்திரபாலா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (27) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, “பயணிகளின் பாதுகாப்பு மட்டுமல்ல, சாரதிகளின் உயிர் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது சர்வதேச தரமான போக்குவரத்து பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றும் முக்கியத்துவமான ஒரு கட்டமாகும்” என்றார்.
மேலும், விதிமீறல் செய்யும் சாரதிகள் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.