Top News
| சிறிய மற்றும் கனரக வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் இருக்கைப் பட்டி அணிய வேண்டும் | | இலங்கையில் வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி அதிகரிப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை | | மோட்டார் வாகன திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட மூவர் விளக்கமறியல் |
Jul 2, 2025

ஈரானை அணு ஆயுதங்களிலிருந்து திசைமாற்ற அமெரிக்கா தீட்டும் மாஸ்டர் திட்டம்

Posted on June 29, 2025 by Admin | 74 Views

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையே சமீபத்தில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து, அமெரிக்கா ஈரானை மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் திட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது.

அணு ஆயுத வளர்ச்சியை முற்றிலுமாக கைவிட்டு, அணு மின்சக்தி உற்பத்தி திட்டத்தில் மட்டுமே ஈரான் ஈடுபடுவதை உறுதி செய்யும் நோக்கில், அமெரிக்கா பல்வேறு பெரும் சலுகைகள் வழங்கும் முன்முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

🔹 ஈரான் யுரேனியம் செறிவூட்டலை முற்றிலும் நிறுத்தினால்

அமெரிக்காவினால் ஈரானுக்கு வழங்கப்படும் முக்கிய சலுகைகள்:

  • 30 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான முதலீடு வழங்கப்படும்
  • ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும்
  • வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்ட 6 பில்லியன் டொலர் பணம் விடுவிக்கப்படும்
  • அமெரிக்கா குண்டு வீசி அழித்த போர்டோ  யுரேனியம் செறிவூட்டல் மையம், ஒரு அணு மின்சக்தி நிலையமாக மாற்றப்படும்

இந்தத் திட்டங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் முன்மொழிவுகள் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப்,

“ஈரானுடன் விரிவான அமைதி ஒப்பந்தத்தை உருவாக்க நாம் முயற்சி செய்து வருகிறோம். யுரேனியம் செறிவூட்டலை ஈரான் கைவிட்டு, அணு மின்சக்தி திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெற வாய்ப்பு உள்ளது,” என தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்குப் பகுதி அரசியல் சமநிலை பெறும் முன்னேற்றமாகவும், அணு ஆயுத பரவலை கட்டுப்படுத்தும் முக்கியமான நகர்வாகவும் இதை வல்லுநர்கள் கருதுகின்றனர்.