சீனாவின் கண்காணிப்பு மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிக்கும் Hikvision நிறுவனம், தேசிய பாதுகாப்புக்கு அபாயகரமாக இருப்பதாக கருதி, அதன் கனடா கிளை உடனடியாக செயல்பாடுகளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கனடா தொழில்துறை அமைச்சர் மேலானி ஜோலி அறிவித்துள்ளார்.
“ஹிக்விஷன் கனடா இன்க் தொடர்ந்தும் இயங்குவது, நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று அரசு தீர்மானித்துள்ளது,” என அமைச்சர் ஜோலி தனது “X” (முன்னாள் ட்விட்டர்) கணக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த முடிவிற்கு முன்னோடியாக, கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பல கட்ட மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவைத் தொடர்ந்து, ஹிக்விஷன் நிறுவனத்திடம் கருத்து கேட்கப்பட்ட போதும், உடனடி பதில் கிடைக்கவில்லை.
ஈரான் – இஸ்ரேல் விவகாரத்தின்போதும் ஈரானின் கமெராக்காளை இஸ்ரேல் ஹெக் செய்து கண்காணித்ததாகவும், இஸ்ரேலின் கமெராக்களை ஈரான் ஹெக் செய்து கண்காணித்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.