வோஷிங்டன் நகரில் உள்ள ஒரு பள்ளியில், மாணவனின் மதிய உணவுக்காக கொண்டு வரப்பட்ட பெட்டியில் உணவுடன் சேர்த்து தவறுதலாக ஒரு துப்பாக்கியும் வைக்கப்பட்ட சம்பவம் அங்குள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலையில் மதிய உணவுக்காக உணவு பெட்டியை திறந்த மாணவன், அதில் இருந்து துப்பாக்கி வெளிப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் நடைபெற்ற விசாரணையில், அந்த துப்பாக்கி மாணவனின் தந்தை சார்பில் தாமாகவே தயார் செய்யப்பட்ட உணவு பெட்டியில் தவறுதலாக வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து மாணவனின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அந்த மாநிலத்தின் காவல்துறையினர் மேலும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.