(மக்கள் தோழன்)
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு, எதிர்வரும் புதன்கிழமை(02) பிற்பகல் 2.00 மணிக்கு பிரதேச சபையில் நடைபெறவுள்ளது.
இப்பிரதேச சபையில் ஆட்சி அமைக்கும் சாத்தியம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சிக்கே அதிகம் என நம்பப்படுகின்றது. இதற்கு ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.
SLMC உறுப்பினர்கள், தவிசாளர் பதவிக்கு உள்ளக முரண்பாடுகள் எதுவும் இல்லை என வெளிப்படையாக கூறினாலும், அந்த பதவியைப் பெறும் ஆர்வம் காரணமாக, கட்சிக்குள் சிலரிடையே பிணக்கு நிலவும் நிலை காணப்படுகிறது.
இதேநேரம், SLMC கட்சித் தலைமை மற்றும் செயலாளர், அட்டாளைச்சேனை பாராளுமன்ற உறுப்பினர் (உதுமாலெப்பை) ஆகியோர், இப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம், தமிழ், சிங்கள மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சரியான முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இந்த தவிசாளர் பதவிக்கு மிகச்சிறந்தவர் யார்? என்று பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க எமது www.thelivu.net இணையதளமானது தனது முகப்புத்தகத்தினூடாக பொது மக்களிடம் கருத்தினை சேகரித்து வருகிறது. உங்களது கருத்தினை பதிவிட இந்த linkஐ Click செய்யுங்கள்
https://www.facebook.com/share/p/16e9tWq6tS/?mibextid=wwXIfr
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமையின் அண்மைக்கால Get out நடவடிக்கைகள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கும்.
வரவிருக்கும் தவிசாளருக்கு உங்கள் கருத்துகள் செல்லும் வகையில் எமது குழுவினரால் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.