அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிகளை தொடர்பாக, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) உறுப்பினர்களிடையே நிலைப்பாடு ஒருங்கிணைப்பதற்கான முக்கிய கலந்துரையாடல் இன்று (ஜூலை 2) நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல், கட்சியின் செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது. மேலும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை இதில் பங்கேற்றார்.
கட்சி வழங்கும் இறுதியான தீர்மானத்திற்கு தாங்கள் அனைவரும் இணங்கி செயல்படத் தயாராக இருப்பதாக SLMC-இன் பிரதேச சபை உறுப்பினர்கள் உறுதியாக தெரிவித்தனர்.