Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

இலங்கை 244 ஓட்டங்களில் ஆல் அவுட்- முதல் இன்னிங்ஸ் முடிவடைந்தது

Posted on July 2, 2025 by Admin | 297 Views

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

தொடக்கத்தில் சீரான ஆட்டத்தை காட்டிய இலங்கை, 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களை பதிவு செய்தது. அணி சார்பில் முன்னணி துடுப்பாளரான சரித் அசலங்க சிறப்பாக விளையாடி 106 ஓட்டங்களை வெற்றி பெற்றார். இது அவரது ஐந்தாவது ஒருநாள் சதமாகும்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் தஸ்கின் அஹமட் சிறப்பாக விளையாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து, பங்களாதேஷ் அணிக்கு வெற்றிக்கு 245 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸ் தற்போது நடைபெற்று வருகிறது.