மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர் ஒருவரால் நடத்தப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோத மருந்து விநியோக செயற்பாட்டில், குறித்த ஊழியர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநோயாளர் பிரிவில் பணியாற்றும் இவர், மருத்துவர்கள் வழங்கும் மருந்துச் சீட்டுக்களை போலியாக தயாரித்து, அதனை வெளியாரிடம் வழங்கி, வைத்தியசாலை மருந்தகத்திலிருந்து விலை உயர்ந்த வலி நிவாரணி மருந்துகளை பெற்றுத்தர உதவி செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இந்த மருந்துகள், அதன் பின் சந்தையில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக பணமும் பெற்றுக்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, சந்தேகநபரான சிற்றூழியரை இன்று கைது செய்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான ஆதாரங்கள், போலி சீட்டுகள் மற்றும் மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மேலதிக விசாரணைகள் தொடருகின்றன.