ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு எம்.எஸ். அப்துல் வாஸித் நியமிக்கப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்துள்ளது.
முன்னதாக இந்த பதவியை வகித்திருந்த எம்.எஸ். நளீம் அவர்களின் இராஜினாமாவை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பதிலாக, வாஸித் அவர்கள் 10ஆவது பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.