அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக பதவி வகிக்கும் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களின் வாட்ஸ்அப் கணக்கு, நேற்று ஹேக் செய்யப்பட்டிருந்தது.
ஹேக் செய்யப்பட்ட அந்த கணக்கின் மூலம், சிலரிடம் பணம் கேட்டும், தவறான தகவல்களையும் பகிர்ந்துள்ளனர்.
வாட்ஸ்அப் கணக்கின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறும் நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டதாகவும், தற்போது வாட்ஸ்அப் கணக்கு வழமைக்கு திரும்பியுள்ளது என தவிசாளர் உவைஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களில் நடைபெறும் இத்தகைய தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பதுடன் வாட்ஸ்அப்பில் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான தகவல்களும் வந்தால் உடனடியாக உறுதி செய்து கொள்ளவும்.
இந்த ஹேக்கிங் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.