அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய காங்கிரஸ் சார்பில் உதவித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட பாறூக் நஜீத் தனது பதவியை உத்தியோகபூர்வமாக கடமையேற்கும் நிகழ்வானது இன்று 04.07.2025ம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பிரதேச சபையின் செயலாளர் எல்.எம்.இர்பான் அவர்களினால் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டது
பதவியை பொறுப்பேற்கும்போதே, பலஸ்தீன மக்களின் சுதந்திரம் மற்றும் நீதிக்கான போராட்டத்திற்கு தனது முழுமையான ஆதரவையும் தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, சபையின் கெளரவ உறுப்பினர்கள், அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் யூ.எல்.உவைஸ், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.அஸ்பர் , நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சிஹாபுடீன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சூறா சபையின் செயலாளர் யூ.எம்.வாஹித், கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், பிரதேசங்களின் மத்திய குழுத் தலைவர்கள், உறுப்பினர்கள் , கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் மற்றும் சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்