சியம்பலாந்துவ பகுதியில் 16 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
முத்துகண்டிய ஹதரவன கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை மீது, தனது 16 வயதில் இருக்கும் மகளுக்கு பாலியல் வன்முறை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாடசாலையில் மாணவி தனது வகுப்பு ஆசிரியரிடம் இந்த துயரத்தை தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக அந்த ஆசிரியர் சியம்பலாந்துவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில், சந்தேக நபர் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 3) கைது செய்யப்பட்டார்.
தாயால் சிறுவயதில் விட்டு செல்லப்பட்ட இந்த சிறுமி, தந்தை மற்றும் இரு சகோதரிகளுடன் குடியிருந்தார். தந்தை வீட்டில் தனிமையில் இருந்தபோது அவளுக்கு மீதான வன்முறையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சியம்பலாந்துவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரவீந்திர ஹேரத் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.