வயம்ப பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவியொருவரின் முகப்புத்தகம் ஊடாக நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்ந்ததுடன், அவற்றை வெளியிடுவதாக மிரட்டிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட மாணவி வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குருணாகல் – மஹவ, பலல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான இளைஞர், போலி முகநூல் கணக்கு ஒன்றை பயன்படுத்தி மாணவியின் கணக்கிற்கு அவரது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்பி, தனது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அவற்றை பொதுமக்கள் இடையே வெளியிடுவதாக மிரட்டியதாக தெரியவந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் செயலில் இறங்கிய நிலையில், சந்தேக நபர் குருணாகலில் வைத்து புதன்கிழமை (ஜூலை 2) கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன.