கதுருவெல காதி நீதிமன்றத்தின் நீதிபதியொருவரும், அதே நீதிமன்றத்தில் பணியாற்றும் கிளார்க் ஒருவரும், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (ஜூலை 4) கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் ரூபாய் ஒரு இலட்சம் மதிப்பிலான லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இந்த லஞ்சம், விவாகரத்து வழக்கொன்றில் பெண்ணுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கும் நோக்கத்திலேயே பெற்றுக்கொள்ளப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டதாகவும், அவர்களை கதுருவெல மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.