கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் (O/L) பெறுபேறுகள் ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன என்றும், பெறுபேறுகள் வெளியீட்டுக்கான உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்த பரீட்சைக்கு மொத்தம் 478,182 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் 398,182 பேர் பாடசாலை மாணவர்கள் எனவும், ஏனையோர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரீட்சை முடிவுகளைத் தெரிவிக்கும் திகதி அருகே வந்துள்ளதை முன்னிட்டு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே கவனிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.