அரசாங்கத்தின் Clean Sri Lanka திட்டத்தின் கீழ், “சூழல் உணர்வுமிக்க சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கல்விச் சுற்றாடலை உருவாக்குதல்” என்ற தொனிப் பொருளில், அட்டாளைச்சேனை ரீபி ஜாயா வித்தியாலயத்தில் இன்று (09.07.2025) சுற்றுச்சூழல் சுத்தம் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்த நிகழ்வு, பாடசாலை அதிபரமய் OLM.றிஸ்வான் தலைமையில், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பிராந்திய சுகாதாரப் பரிசோதகர் உள்ளிட்டோரின் செயல்பாடுகளுடன் மாணவர்கள் நேரடியாக பங்கேற்றதன் மூலம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை வளாகத்திலுள்ள நீர் தேங்கும் இடங்கள், கழிவுகள், பூஞ்சை போன்றவற்றை அகற்றி, சுத்தமான மற்றும் பாதுகாப்பான கல்வி சூழலை உருவாக்கும் நோக்கில் இந்தச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வின் மூலம் மாணவர்கள் சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்புணர்வை உணர்ந்ததோடு, டெங்கு போன்ற தொற்றுநோய்களைத் தடுக்கும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இது, சமூக மட்டத்தில் சுகாதார நலனையும், பாடசாலை மட்டத்தில் சுத்தம் மற்றும் ஒழுங்கையும் வலுப்படுத்தும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது.