பாலமுனை மஹாஸினுல் உலும் இஸ்லாமிய கல்லூரியின் மாணவர்கள் தங்களின் கல்வி அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், மூன்று நாள் கல்விச் சுற்றுலா ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இந்த சுற்றுலா, கல்லூரி அதிபர் ஏ.எல். சாஜீத் ஹுசைன் அவர்களின் தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுற்றுலாவின் முதற்கட்டமாக, மாணவர்கள் இன்று (09.07.2025) பாராளுமன்றத்துக்குச் சென்று பார்வையிட்டனர். இந்த பயணத்தின் மூலம் மாணவர்களுக்கு நாடாளுமன்ற பணிச்சுழற்சி, அரசியல் செயற்பாடுகள் குறித்த நேரடி அனுபவம் கிடைத்துள்ளது.
இந்த பார்வை விஜயம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை ஜேபி அவர்களின் சிபாரிசின் அடிப்படையில் அமையப்பெற்றது.
மேலும், மாணவர்களின் பாராளுமன்ற விஜயத்தின் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரஊப் ஹக்கீம் அவரும் நேரில் சென்று மாணவர்களுடன் சந்தித்து உரையாடினார்.
இந்த கல்விச் சுற்றுலா, மாணவர்களில் நாட்டுப்பற்றும், அரசியல் விழிப்புணர்வும் வளர்க்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது.