இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 30 சதவீத வரியை அமெரிக்க அரசு விதித்து வரிக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
இந்த புதிய வரி தீர்மானம் காரணமாக, இலங்கை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சுமை அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள் மீது இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறப்படுகிறது.