அட்டாளைச்சேனையின் விளையாட்டு வரலாற்றில் புதிய பக்கம் எழுதியது போல், அட்டாளைச்சேனை பிரீமியர் லீக் (APL) கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி கடந்த 09.07.2025 அன்று உற்சாகமான சூழலில் அஸ்ரப் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பம் கண்டது.
இந்த தொடரின் முக்கிய தனிச்சிறப்பாக, அட்டாளைச்சேனை மண்ணின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில், அப்பகுதியில் பிறந்த வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் இதில் பங்கேற்கின்றன. மேலும், அட்டாளைச்சேனையில் பிரசித்திபெற்ற இடங்களின் பெயர்களை கொண்டே அணிகளுக்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
மொத்தமாக 07 அணிகள் இந்த போட்டித் தொடரில் தங்களது திறமையை வெளிப்படுத்த தயாராக உள்ளன. மக்கள் உற்சாகத்துடன் வரவேற்ற இந்த தொடர், உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, விளையாட்டு விரும்பிகள் அனைவரையும் கவரும் வகையில் நடைபெற உள்ளது.