கொழும்பு பங்குச் சந்தை வரலாற்று உச்சத்தைத் தொட்டது
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) நேற்று (ஜூலை 9) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை பதிவான மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
முந்தைய வர்த்தக நாளுடன் ஒப்பிடுகையில், 129.37 புள்ளிகள் உயர்வை ASPI சாதித்துள்ளது. சந்தையின் இந்த வலிமையான செயல்திறன், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகளில் 125 நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்வைப் பதிவுசெய்தன. இது சந்தையின் மொத்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது.
மேலும், இன்று (ஜூலை 10) பங்குச் சந்தையில் பதிவான மொத்த வர்த்தகப் புரள்வு ரூ.5.98 பில்லியனை எட்டியுள்ளது என்று கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.