மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் ஜப்றான், உப தவிசாளர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தெரிவாகிய அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்கும் நிகழ்வு 2025 ஜூலை 9ஆம் திகதி மன்னார் பிரதேச சபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த வரவேற்பு விழா, சபைச் செயலாளரின் தலைமையில் நடத்தப்பட்டது. நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிதாக பொறுப்பேற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும், முன்னாள் தவிசாளர் முஜாஹீர், தொழிலதிபர் அலாவுதீன், கட்சி இணைப்பாளர் முனவ்வர், சபையின் அரச அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு, புதிய நிர்வாகக் குழுவிற்கு உற்சாகம் அளித்தனர்.
இந்த நிகழ்வு, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் ஒரு முக்கியமான கட்டமாக அமைந்தது.