(குரு சிஷ்யன்)
அட்டாளைச்சேனையின் கல்வி வரலாற்றில் தன் பெயரை பொலிவுடன் பதித்துள்ளது அல் அர்ஹம் வித்தியாலயம். 2024 (2025) ஆம் ஆண்டுக்கான G.C.E. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளில் இந்தப் பாடசாலை 94% தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்து, குறிப்பிடத்தக்க சாதனையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஏ.எப்.நதீஸ், எம்.ரி.எம்.அர்பாத் ஆகிய இரு மாணவர்கள் 09A பெறுபேறுகளைப் பெற்று, பாடசாலையின் கல்வி தரத்தையும் புகழையும் நாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
2024 (2025) பரீட்சைக்குத் தோற்றிய 32 மாணவர்களில் 30 பேர் உயர்தர கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர். இது அல் அர்ஹம் வித்தியாலயத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
தேர்ச்சி விகிதங்கள் (பாடவாரியாக):
இந்தச் சாதனைகள், மாணவர்களின் முனைப்பும், அதிபர் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணமும், மற்றும் முழுமையான பாடசாலை ஒத்துழைப்பும் அடிப்படையாக இருந்தன என்பதை இந்த பெறுபேறுகள் வலியுறுத்துகின்றன.
பாடசாலையைப் பெருமைப்படுத்திய மாணவச்செல்வங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!
அவர்கள் கல்வி வெற்றிகள், எதிர்கால மாணவர்களுக்கு ஊக்கம் மற்றும் முன்னுதாரணமாக அமையும் என்பது உறுதி.