Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 22, 2026

சூழ்நிலைகளை வென்று சாதனையின் உச்சியை தொட்ட அக்கரைப்பற்றின் அஸ்ஸிறாஜ் மாணவர்கள்!

Posted on July 12, 2025 by Admin | 667 Views

(குரு சிஷ்யன்)

அக்கரைப்பற்றின் கல்விச் சேவையில் நீண்ட காலமாக சிறந்து விளங்கும் அஸ் ஸிராஜ் மகா வித்தியாலயம், 2024(2025) ஆம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் 91% தேர்ச்சி என்ற சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது. இது இப்பாடசாலையின் கல்வித்தரத்தையும், மாணவர்களின் உழைப்பையும் வெளிப்படுத்தும் வரலாற்றுப் பக்கமாக அமைகிறது.

இந்தப் பரீட்சையில் தோற்றிய 154 மாணவர்களில் 127 பேர் உயர் தரத்திற்கு தகுதியைப் பெற்றுள்ளனர். இது கல்விப் பயணத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்வாகும்.

மேலும், ஒரு மாணவர் அனைத்து 9 பாடங்களிலும் A சித்தி (9A) பெற்று பாடசாலையின் பெருமையை உலகளாவிய ரீதியில் உயர்த்தியுள்ளார்.

பாடவாரியாக பெற்ற தேர்ச்சி வீதம்:

  • தமிழ் மொழி மற்றும் இலக்கியம் – 88%
  • கணிதம் – 87%
  • விஞ்ஞானம் – 94%
  • வரலாறு – 94%
  • இஸ்லாம் – 87%
  • ஆங்கில இலக்கிய நயம் – 83%
  • சிங்களம் – 100%
  • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) – 100%
  • உடல்நலம் மற்றும் உடற்கல்வி – 100%
  • ஆங்கிலம் – 96%
  • குடியியல் கல்வி – 90%
  • தமிழ் இலக்கிய நயம் – 83%
  • சித்திரம் – 100%
  • வணிகவியல் மற்றும் கணக்கியல் – 98%
  • இசை – 46%
  • வேளாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்பம் – 100%

இந்த சிறப்பான பெறுபேறுகளை வழங்கிய மாணவச்செல்வங்களுக்கும் முன்னாள் அதிபர் A.G. பஸ்மில், தற்போதைய அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இப்பெரும் வெற்றி, மாணவர்களின் கடின உழைப்புக்கும், ஆசிரியர் குழுவின் முழுமையான அர்ப்பணிப்புக்கும் சாட்சியாக விளங்குகிறது.

அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்தில் அஸ் ஸிராஜ் மகா வித்தியாலயம் தனது களத்தில் மேலும் உயர்ந்தோங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.