(குரு சிஷ்யன்)
பாலமுனையின் கல்விப் பண்பாட்டை பறைசாற்றும் விதமாக, மின்ஹாஜ் மகா வித்தியாலயம் 2024 (2025) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் 95% என்ற மிகப்பெரிய தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்து, புதிய வரலாற்றுப் பக்கத்தை எழுதியுள்ளது.
இந்த ஆண்டில் G.C.E. (O/L) பரீட்சைக்கு இப்பாடசாலையிலிருந்து தோற்றிய 73 மாணவர்களில் 69 பேர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். இது கடந்த கால சாதனைகளைத் தாண்டி, பாடசாலையின் கல்வித் தரத்தை உலகறியச் செய்த முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
மேலும், இப்பாடசாலையைச் சேர்ந்த ஒரு மாணவர் 09A எனும் மிக சிறந்த பெறுபேற்றினைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
பாடவாரியாக பெறுபேறுகள்:
இந்தச் சாதனையை அடைய பாடசாலை அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒற்றுமையாகக் கைகொடுத்துள்ளனர். அவர்களது அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் இக்கல்வி வெற்றியின் சாவியாக விளங்குகிறது.
பாலமுனையின் இளம் தலைமுறைகளுக்கு முன்னோடியான இந்தப் பெறுபேறுகள், கல்வி மேம்பாட்டிற்கான புதிய திசையைத் திறந்து வைத்துள்ளன.
தொடரும் வெற்றிகளுக்காக கல்விப் பயணத்தில் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்!