Top News
| அக்கரைப்பற்றில் 2 வயது குழந்தை பிறந்த நாளில் மரணம் | | அனுராதபுரம் பெண் வைத்தியரின் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேகநபரின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு | | விடுதியிலிருந்து வெளியேறுமாறு தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுறுத்தல் |
Jul 16, 2025

அட்டாளைச்சேனையில் கல்வி வரலாற்றை மாற்றிய ஆலங்குளம் ரஹ்மானியா வித்தியாலய மாணவர்கள்!

Posted on July 12, 2025 by Admin | 318 Views

(குரு -சிஷ்யன்)

அட்டாளைச்சேனை பிரதேச எல்லைக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் இயற்கை சூழலில் இயங்கி வரும் கரடிக்குளம் ரஹ்மானியா வித்தியாலயம், 2024 (2025)ஆம் ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சையில் 90% தேர்ச்சி பெற்றுள்ளதோடு, கல்வி வரலாற்றில் முக்கியப் பக்கத்தைத் திருப்பியுள்ளது.

சிறந்த பெறுபேறுகள் வழக்கமாக பெரிய பாடசாலைகளில் மட்டும் எதிர்பார்க்கப்படுகின்ற சூழ்நிலையில், பொருளாதார ரீதியில் பின்னடைவு கொண்ட சமூகத்திலிருந்து கல்விக்காக பாடசாலை செல்வதே சவாலான ஒன்றாகும். அந்நிலையில், இப்பாடசாலையின் அதிபர் கே.எல்.எம்.முனாஸ், ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், மாணவர்களின் விடாமுயற்சியும் இச்சாதனையை சாத்தியமாக்கியுள்ளது.

பாடசாலையின் மாணவிகளுள் எம். அனபா, 5A, 2B, 2C என்ற சிறந்த பெறுபேற்றுடன் மாண்புடனும் நம்பிக்கையுடனும் வெளியேறியுள்ளார். இது ஆலங்குளம் சமூகத்திற்கே பெருமை சேர்க்கும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. மேலும், ஏ.எப். நஷ்ரீன் என்ற மாணவி, ஆங்கிலப் பாடத்தில் A, ஆங்கில இலக்கிய நயத்தில் C சித்திகளைப் பெற்றுள்ளமை, பாடசாலை வரலாற்றில் முதன்முறையாகும்.

அத்துடன், பாடசாலையிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய 10 மாணவர்களில் 9 பேர் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். இது ஒரு வரலாற்று சாதனையாக பதிவாகிறது.

பாட விபரங்கள்:

  • தமிழ்மொழியும் இலக்கியமும் – 90%
  • கணிதம் – 70%
  • விஞ்ஞானம் – 50%
  • வரலாறு – 80%
  • இஸ்லாம் – 100%
  • ஆங்கில இலக்கிய நயம் – 100%
  • சுகாதார உடற்கல்வி – 100%
  • ஆங்கிலம் – 80%
  • குடியியல்கல்வி – 100%
  • தமிழ் இலக்கிய நயம் – 89%

இந்த சாதனைகள், பாடசாலையின் கல்வித் தரத்தையும், அதன் சமூக பொறுப்புணர்வையும் காட்டும் நிழற்படங்களாகக் கூறலாம். அதிபர் மற்றும் ஆசிரியர்களின் நீடித்த உழைப்பு, மாணவர்களின் தாராளமான முயற்சி, இவை அனைத்தும் ஒன்றாக வந்து உருவாக்கியுள்ள இச்சாதனை, ஊர்மக்களிடையே பெரும் பெருமிதத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்பாடசாலையின் சாதனை, சாதனைகளுக்கு ஒரு உதாரணமாகவும், அனைத்து பிற பள்ளிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாகவும் திகழ்கிறது.