கல்வி முறைமையை புதுப்பிக்கும் நோக்கில், கல்வி மறு சீரமைப்புக்கான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (13) கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்கள கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கௌரவ ஹரினி அமரசூரிய அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண ஆளுநர், கல்வி அமைச்சின் செயலாளர்கள், முக்கிய கல்வி அதிகாரிகள், இலங்கை பரீட்சைத் திணைக்களம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளரும் பங்கேற்றனர்.
மேலும், SLEAS, SLTES அதிகாரிகள், ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய அதிகாரிகள் மற்றும் மாகாணக் கல்விப் பணிமனைகளில் பணிபுரியும் கணக்காளர்கள் என பலரும் இதில் ஈடுபட்டு, கல்வி எதிர்காலத்திற்கான விடயங்களை விரிவாக விவாதித்தனர்.
இந்நிகழ்வானது, மாறி வரும் உலகத் தேவைகளுக்கு ஏற்ப இலங்கையின் கல்வி முறையை நவீனமயமாக்கும் பயணத்தில் ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது.