சொத்து மற்றும் பொறுப்புக்கூறல் அறிக்கைகளைத் தாமதமாகச் சமர்ப்பிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக, இன்று (14) முதல் அபராத நடவடிக்கைகள் அமலுக்கு வருகிறது.
அரச ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் 30ஆம் திகதிக்குள் சொத்து மற்றும் பொறுப்புக்கூறல் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அனைத்து அரச அதிகாரிகளுக்கும் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்தக் காலக்கெடுவை மீறி இதுவரை அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து, ஒவ்வொரு நாளுக்கும் 1/30 பங்கு வீதமாக அபராதமாகக் கழிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும், கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான நடைமுறைகள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டுமெனவும் அந்த ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.