அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் மற்றும் அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளர் எம்.ஏ.எம். ரஹ்மத்துல்லாஹ் ஆகியோருக்கு இடையில் இன்று (15.07.2025) முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
இச் சந்திப்பின் போது, அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் காணப்படும் ஆசிரியர் மற்றும் பெளதீக வளங்களின் பற்றாக்குறைகள் குறித்து தவிசாளர் உவைஸ் தனது கவலையை வெளிப்படுத்தினார். இவ்விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதை அவர் வலியுறுத்தியதுடன், கோட்டத்தின் பாடசாலைகளின் செயற்பாடுகளை வலுப்படுத்த பிரதேச சபையின் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த வலயக் கல்வி பணிப்பாளர், தற்போதைய சவால்களை விலக்கி எதிர்காலத்தில் கல்விக் கோட்டத்திற்குத் தேவையான வளங்களை வழங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடல், அட்டாளைச்சேனைப் பகுதியின் கல்வி முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய அத்தியாயமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இக்கலந்துரையாடலில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். ஹஸீன் அவர்களும் கலந்துகொண்டார்.