அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, நேற்று (14) வடமேல் மாகாண ஆளுநர் திரு. திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய மற்றும் வடமேல் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. டப்ளியு.எம்.சி.கே. வன்னிநாயக ஆகியோரை குருநாகலில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, கல்வி மற்றும் நிர்வாக தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பினரும் பகிர்ந்த அறிவு மற்றும் அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களை இணைந்து செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.