(குரு -சிஷ்யன்)
அட்டாளைச்சேனையின் கல்வி வரலாற்றில் முக்கியப் பக்கங்களை அமைத்துள்ள, இயற்கை அழகோடு நெய்தல் சூழலைத் தழுவிய அந்நூர் மகா வித்தியாலயம், இந்த ஆண்டு (2024/2025) சாதாரண தரப் பரீட்சையில் 70% சிறப்புத் தேர்ச்சி பெற்று, தனது கல்வி முன்னேற்றத்தில் மேலும் ஒரு பொற்காலத்தைப் பதித்துள்ளது.
G.C.E. (O/L) பரீட்சைக்கு தோற்றிய 46 மாணவர்களில் 32 பேர் உயர்தர கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது, கல்விச் சாதனைகளின் படிக்கட்டுகளில் வெற்றிகரமான படிநிலையாகும்.
பாடவாரியாக பெறுபேறுகள்:
இந்த வெற்றியின் பின்னணியில், கல்விக்காக அயராது உழைத்த மாணவச் செல்வங்களின் உற்சாகமும், அதிபர் ஏ.எம்.அஸ்மி, பிரதி அதிபர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் தாராளமான அர்ப்பணிப்பும் திகழ்கின்றன.
இப்பாடசாலையின் கல்வி பயணம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இந்தச் சாதனை மாணவர்களின் திறமையை வலியுறுத்துகிறது என்பதற்கும், அதிபர் குழுவின் ஒழுங்குமுறை முயற்சியை ஒளிவீசுகிறது என்பதற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.