பொத்துவில் பிரதேச சபையின் பொதுச் சந்தையை புனர்நிர்மாணம் செய்யும் திட்டத்தின் ஒரு கட்டமாக ஒரு முக்கியமான களவிஜயம் நடத்தப்பட்டது.
இந்த கள ஆய்வுப் பணியை பிரதேச சபை தவிசாளர் கௌரவ S.M.M. முஷாரப் தலைமையில், தொழிநுட்ப அதிகாரி திரு. T. சதீஷ்காந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.எல். அலிமுதீன், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் F. உவைஸ் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து முன்னெடுத்தனர்.
பொதுச் சந்தையின் தற்போதைய நிலையை ஆய்வு செய்த அவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து தங்களது தேவைகள் மற்றும் பார்வைகள் குறித்தும் நேரடியாகக் கேட்டு அறிந்தனர்.
இந்த களவிஜயம், சந்தையின் புனரமைப்பை மக்கள் தேவைகளை மையமாகக் கொண்டு திட்டமிடுவதற்கான ஒரு முக்கியப் படியாகக் கருதப்படுகிறது.