கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். அப்துல் வாஸித், இன்று காலை 10:00 மணியளவில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் அரச திணைக்கள தலைவர்களுடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தினார்.
இந்த சந்திப்பில், பொத்துவில், கோமாரி மற்றும் லாகுகல பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசப்பட்டன. கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, விவசாயம், காணி, நீர்ப்பாசனம், சமூர்த்தி, போதை ஒழிப்பு, குடிநீர், ஆற்றுமண் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் முக்கியமாக உள்ளடக்கப்பட்டன.
அதேபோல், அரச நிறுவனங்களில் சேவை வழங்கும் போது ஏற்படும் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நிர்வாக இடர்பாடுகள் குறித்தும் உரையாடப்பட்டது.
இவ்விவாதத்தில், குறித்த பிரச்சினைகளை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்க தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்க தயார் என்று திணைக்கள அதிகாரிகள் உறுதியளித்தனர்.
மக்களின் நலனுக்காக அரசு துறைகள் வினைத்திறனுடன் செயலாற்ற வேண்டும் என்றும், எதிர்காலத்தில் எந்தவொரு பிரச்சினைக்கும் விரைவான தீர்வுகள் கிடைக்க வேண்டும் என்பதே தனது முக்கியக் குறிக்கோளாகும் என எம். எஸ். அப்துல் வாஸித் கூறினார்.