Top News
| முன்னாள் அமைச்சர் தயாரத்னவின் மறைவுக்கு உதுமாலெப்பை எம்பி அனுதாபம் தெரிவிப்பு | | சிராஜுதீனின் மறைவுக்கு ரிஷாட் பதியுதீன் எம்பி அனுதாபம்- “அவரது நற்பணிகளை கட்சி என்றும் மறக்காது” | | போதைப்பொருளை பொம்மைக்குள் மறைத்து கடத்திய 29 வயது பெண் கைது |
Jul 26, 2025

இடைநடுவே நிறுத்தப்பட்ட வீடமைப்பு திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

Posted on July 16, 2025 by Sakeeb | 35 Views

நகர அபிவிருத்தி அதிகார சபையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த எட்டு வீடமைப்பு திட்டங்கள் மீண்டும் செயற்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாரஹேன்பிட்டி மற்றும் டொரிங்டன் பகுதிகளில் செயல்படவிருந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இலக்காகக் கொண்டுள்ள இரண்டு புதிய வீடமைப்பு திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, நடுத்தர வருமானம் பெறுவோருக்காக பேலியகொடை பகுதியில் தொடங்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட இரண்டு தொடர்மாடி குடியிருப்பு திட்டங்கள், ஒருகொடவத்தை பகுதியில் உள்ள இரண்டு வீடமைப்பு திட்டங்கள் மற்றும் ஸ்டேடியம் கம வீடமைப்பு திட்டத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க புதிய முதலீட்டாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகார சபை அறிவித்துள்ளது.

இத்திட்டங்கள் அனைத்தும் நகர்ப்புற வீட்டு வசதி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.