இரவு நேர நிகழ்வுகள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் கூட்டம் – பொதுமக்கள் முறையீடுகளுக்கு பதிலளிக்க நடவடிக்கை
அறுகம்பே மற்றும் கோமாரி பகுதிகளில் இயங்கும் உல்லாச விடுதிகளில் நடைபெறும் இரவு நேர களியாட்டங்கள், டிஜே இசை நிகழ்ச்சிகள் போன்றவை, பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் தொல்லைகள் குறித்து பெறப்பட்ட முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, அந்த விடுதிகள் எதிர்காலத்தில் சட்டமுறைப்படி இயங்கக் கூடிய வகையில் ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இந்த விடுதி உரிமையாளர்களுடனான முக்கிய ஆலோசனை கூட்டம், 2025 ஜூலை 18ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு, பொத்துவில் பிரதேச சபையில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் பிரதித் தவிசாளர் கௌரவ ஏ. மாபீர், செயலாளர் ஏ. ஜீ. முபாறக், உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொத்துவில் பொலிஸ் பொறுப்பதிகாரி, ஆய்வு உத்தியோகத்தர் எம்.எம்.எம். றிஸ்வி (அம்பாறை மாவட்ட ACLG அலுவலகம்), பொதுச்சுகாதாரப் பரிசோதகர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப நிபுணர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் வாயிலாக, பொதுமக்களின் நலனும், வர்த்தக உரிமையாளர்களின் பங்களிப்பும் சமநிலையுடன் பரிசீலிக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு முறையான தீர்வுகள் காண வழிகாட்டப்பட்டது.