அட்டாளைச்சேனை பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று (19.07.2025) சாரா பீச் ரிசோர்ட் கூட்ட மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த விசேட ஆலோசனை கூட்டம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது.
கூட்டத்தில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், மத்திய குழுவினர், பிரதேச சபை தவிசாளர், கெளரவ உறுப்பினர்கள், தேர்தல் மற்றும் கிளைக் குழுவினர், நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, தற்போதைய அரசியல் நிலவரம், உள்ளூராட்சி நிர்வாகம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இக்கூட்டத்தில், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் (JP), கட்சியின் பிரதித் தலைவர் மற்றும் மூத்த சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், உயர்பீட உறுப்பினர் மற்றும் பிரதேச உறுப்பினர்களான றியா மசூர், ஐ.எல். அஸ்வர் சாலி, எஸ்.எம். றியாஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு, தங்களுடைய முக்கியக் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்தனர்.
இச் சந்திப்பு, கட்சியின் உள்ளமைப்பு பலப்படுத்தலுக்கான முக்கியமான பயணமாகவும், எதிர்கால செயல் திட்டங்களுக்கு வழிகாட்டியாகவும் அமைந்தது.