ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில், உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என மொத்தமாக 168 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.
இவர்களுக்காக இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி வகுப்பொன்று ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஒரு விசேட ஆலோசனை கூட்டம் கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நேற்று (18.07.2025) காத்தான்குடியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாசித், முன்னாள் எம்.பியும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான எஸ்.எம்.எம். முஷாரப், காத்தான்குடி நகர சபை முதல்வர் அல்ஹாஜ் எஸ்.எச். அஸ்பர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், இறக்காமப் பிரதேச சபை தவிசாளர் எம். முஸ்மி, கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி முகாம், புதிய உள்ளூராட்சி பிரதிநிதிகள் தங்கள் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்கான வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.