நுரைச்சோலை தேசிய பாடசாலையின் பிரதி அதிபராக பணியாற்றிய எச். எம். ரசீன், 37 ஆண்டு சேவைக்கு பிறகு ஓய்வு பெற்றுச் சென்றார். அவரது நீண்டகால கல்விப் பணி நிறைவடைந்ததை முன்னிட்டு, ஒரு சிறப்பான பிரியாவிடை விழா நேற்று (18.07.2025) பாடசாலையில் நடைபெற்றது.
சஞ்சிதாவத்தை பகுதியில் வசிக்கும் ரசீன், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் 1988ம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி சிலாவத்துறை முஸ்லிம் பாடசாலையில் தனது ஆசிரியர் பணியை ஆரம்பித்தார். அதன்பின் நுரைச்சோலை, கொய்யாவாடி, ஆலங்குடா உள்ளிட்ட பல பாடசாலைகளில் அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகிய பதவிகளில் சேவையாற்றியுள்ளார்.
அவருக்கான பிரியாவிடை விழாவானது நுரைச்சோலை தேசிய பாடசாலையின் அதிபர் M.I. இம்ரான் கான் தலைமையில் நடந்தது. நிகழ்வில் பிரதி அதிபர் S.H.M. நபீஸ், உப அதிபர்கள் N.T.M. தாரிக், M. இக்பால், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி பிரமுகர்கள் பலரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
பல்வேறு பாடசாலைகளில் நிரந்தர ஓர் தாக்கத்தை ஏற்படுத்திய ரசீனின் சேவை, கல்விக்கழகத்தில் மதிப்புமிக்கதாகும் என பலரும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.